search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மாயம்"

    • கிருஷ்ணகிரி அருகே மாணவிகள் உட்பட 3 பெண்கள் மாயமாகினர்.
    • போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் திம்மாபுரத்தை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதில் காருபாலாவை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. நர்சிங் மாணவி. கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் மஞ்சுநாத் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தருமபுரி அருகே கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம் ஆனார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். கடந்த 12-ந் தேதி சிறுமியின் தாய் கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் காணவில்லை. இதனைய டுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்கா–ததால் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாண வியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சாமி செட்டிபட்டி அருகே உள்ள பங்கு நத்தம் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடு முறை என்பதால் வீட்டி லேயே இருந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வெளியே வேலைக்கு சென்றவர்கள் மாலை திரும்பி வீட்டில் பார்த்த போது சிறுமியை காண வில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதே போன்று தருமபுரி மாவட்டம் மாரவாடி அடுத்த கதிர்நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (43). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நன்னடத்தை அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் முடிந்து 15 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில் கதிர்நாயக்கனளி கிராமத்தில் மகள் ரஞ்சனா தேவி (23) என்பவருடன் வசித்து வந்தார். ரஞ்சனா தேவி 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து தாய் இந்திரா கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன ரஞ்சனா தேவியை தேடி வரு கின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள புனே–பள்ளியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் கொடுமணபள்ளியைச் சேர்ந்த 17வயது சிறுமி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இதற்காக அந்த சிறுமி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மாதம் 17-ந் தேதி மாணவி, கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அந்த மாணவி, வீட்டிற்கு செல்லவில்லை.

    இதுகுறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மாயமாவது அதிகரித்து வருகிறது.
    • கடந்த 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடுமுழுதும் சுமார் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

    புதுடெல்லி:

    தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த, 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர்.

    இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆயிரம் பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள நடூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார். கடந்த 31-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நந்தினி என்கிற சோனியா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நந்தினி குழந்தை பெற்ற பிறகு மொரப்பூர் அருகேயுள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று நந்தினி குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடிவருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். இதில் இளைய மகள் சத்யா (வயது20). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் ராமியம்பட்டியில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து ராமு கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து மாயமான சத்யாவை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் திவ்யா. இவர் நாகனம்பட்டி அரசு கலை கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று திவ்யா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை கணேசன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.
    • குஜராத் மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு 9,268 பெண்களும், 2020-ம் ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய் உள்ளனர். 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் மாயமாகி உள்ளனர்.

    இந்தத் தகவல்கள், என்.சி.ஆர்.பி. என்று சொல்லப்படக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவை ஆகும்.

    அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய் உள்ளதாக 2021-ம் ஆண்டு மாநில சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா கூறும்போது, "காணாமல் போன பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதையும் நான் கவனித்துள்ளேன்" என கூறி உள்ளார்.

    • மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கரடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவருடைய தந்தை திருப்பூரில் வேலை செய்து வருகிறார். மாணவி தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாண வியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள வடகரை பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் ஜம்மன அள்ளி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு பால் எடுத்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அதேபோல் மொரப்பூர் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி அகிலா (வயது36). இருவருக்கும் மோஜித் என்ற மகன் உள்ளார்.

    கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அகிலா எம்.தோட்டம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் 7 வருடமாக வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியோர்கள் சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர்.

    இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வீட்டை வீட்டு வெளியே சென்ற அகிலா வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அருகே உள்ள குஞ்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் ஆட்டோ டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 45).

    சம்பவத்தன்று ஆட்டோ ஓட்ட சென்ற பழனி மாலை விடு திரும்பி பார்க்கும் போது அவருடைய மனைவி சாந்தி காணவில்லை. இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் பெரும்பாலை அருகே உள்ள சி.பாசிப்பாலி கோம்பை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி லாவண்யா (வயது30). இவருக்கு தர்ஷன் என்ற மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு இறுதி சடங்கிற்காக சென்ற லாவண்யா மற்றும் அவருடைய மகன் தர்ஷன் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 7-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் காலை காணவில்லை
    • 17 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் முத்துமணி இவரது மகள் சண்மதி (வயது22).

    இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் காலை காணவில்லை.

    இது குறித்து முத்துமணி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே போல் தருமபுரி மாவட்டம், பழைய புதூர் அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரும் திடீரென மாயமாகிவிட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்துள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மோனிஷா (வயது 22). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல உங்கரான அள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் உண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர்.

    இந்த வகையில் ஒகேனக்கல் அருகேயுள்ள ஏரிக்காடு பகுதியை சேர்ந்த மஞ்சு (24) என்பவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரும் திடீரென மாயமாகிவிட்டார்.

    இது குறித்து அவரது தாய் விஜய தந்த புகாரின்பேரில் ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மாலை திரும்பி வந்து பார்த்தபோது பெண்ணை காணவில்லை.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கந்தமேடு பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவரது மனைவி பர்வீன் (வயது 45). இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளுக்கு 17 வயது ஆகிறது. வீட்டிலேயே இருந்து வந்தார்.

    நேற்று பர்வீன் வேலைக்கு சென்று விட்டு மாலை திரும்பி வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிபர்த்தும் அந்த பெண்ணை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பர்வீன் அரூர் போலீசில் தனது மகள் காணாமல் போனது குறித்து புகர் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல பென்னாகரம் அருகேயுள்ள வி.அக்ரஹாரம் பூஞ்சோலை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் பிளஸ்-2 படித்து வரும் தனது மகளை காணவில்லை என்று பென்னாகரம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×